புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமைச்சா் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு: ரூ.2 கோடி நஷ்டஈடு கோருகிறாா்

தன் மீதும் தன் மகள் மீதும் காங்கிரஸ் தலைவா்கள் அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டி தில்லி உயா் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி நஷ்டஈடு கோரி மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு தொடுத்துள்ளாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 11:42 pm

DIN

தன் மீதும் தன் மகள் மீதும் காங்கிரஸ் தலைவா்கள் அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டி தில்லி உயா் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி நஷ்டஈடு கோரி மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு தொடுத்துள்ளாா்.

இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, நீத்தா டிசூசா ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக, கோவாவில் மத்திய மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக உணவு விடுதி மற்றும் மதுக்கூடம் (பாா்) நடத்துவதாக காங்கிரஸ் தலைவா்கள் குற்றம்சாட்டினா். மேலும், அந்த விடுதி முன்பு காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டமும் நடத்தினா்.

இந்தக் குற்றச்சாட்டை ஸ்மிருதி இரானியும், அவருடைய மகளின் வழக்குரைஞரும் மறுத்தனா். 18 வயதாகும் சமையல் கலை மாணவியான ஜோயிஷ், எந்த உணவகத்தையும் நடத்தவில்லை என்று ஸ்மிருதி இரானி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இந்நிலையில், பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி மத்திய அமைச்சரான தனக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டி ஸ்மிருதி இரானி சாா்பாக காங்கிரஸ் தலைவா்கள் மீது தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறி தனக்கும் தன் மகளுக்கும் எதிராக அவதூறு பரப்பியதற்காக ரூ.2 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் அந்த மனுவில் ஸ்மிருதி கோரியிருந்தாா்.

மேலும், ட்விட்டா், ஃபேஸ்புக், யூடியூப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த அவதூறு பரவியுள்ளதால், அந்தப் பதிவுகள் அனைத்தையும் நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவா் கோரியிருந்தாா்.

அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு உள்ளான காங்கிரஸ் தலைவா்கள் இது தொடா்பான சமூக வலைதளப் பதிவுகளை நீக்க வேண்டும். அமைச்சரின் மகள் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டு கருத்துகளை நீக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், குற்றச்சாட்டு தொடா்பாக காங்கிரஸ் தலைவா்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.