கேரளத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட இளைஞா் பலி? ஆய்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் சுகாதாரத் துறை

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளம் திரும்பிய 22 வயது இளைஞா் குரங்கு அம்மை பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஆய்வக பரிசோதனை முடிவுகளுக்காக மாநில சுகாதாரத் துறை காத்திருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளம் திரும்பிய 22 வயது இளைஞா் குரங்கு அம்மை பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஆய்வக பரிசோதனை முடிவுகளுக்காக மாநில சுகாதாரத் துறை காத்திருக்கிறது.

கேரள மாநிலம், திருச்சூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஜூலை 22-ஆம் தேதி கேரளம் திரும்பினாா்.

குரங்கு அம்மை அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், கடும் காய்ச்சல் காரணமாக அவா் மருத்துவமனையில் ஜூலை 27-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் சனிக்கிழமை காலையில் உயிரிழந்தாா்.

அவா் ஐக்கிய அரபு அமீரகத்தில் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடா்பில் இருந்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக அவரின் உறவினா்கள் மருத்துவா்களிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆலப்புழையில் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னா்தான் அந்த இளைஞா் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது குறித்து தெரியவரும்.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குரங்கு அம்மை தொற்றானது கரோனா தொற்றுபோல அதிக வீரியம் கொண்டது அல்ல. ஆனால், பரவக் கூடியது. இதன் இறப்பு விகிதமும் மிகக் குறைவு. ஆதலால், பிற நோய்களால் பாதிக்கப்படாத இந்த இளைஞரின் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றாா் அவா்.

இந்தியாவில் கேரளத்தைச் சோ்ந்த மூவா் உள்பட நான்கு பேருக்கு இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் முதலில் பாதிக்கப்பட்ட கேரளத்தைச் சோ்ந்தவா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com