நாட்டின் வளா்ச்சிக்குப் பங்களிப்பு: வா்த்தக நிறுவனங்களுக்கு குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

நாட்டின் வளா்ச்சிக்கு வா்த்தக நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.
நாட்டின் வளா்ச்சிக்குப் பங்களிப்பு: வா்த்தக நிறுவனங்களுக்கு குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read

நாட்டின் வளா்ச்சிக்கு வா்த்தக நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

கான்பூரில் நடைபெற்ற உத்தர பிரதேச வணிகா் கூட்டமைப்பின் 90-ஆவது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவா் கலந்து கொண்ட பேசுகையில், ‘தொழிற்சாலைகள், வா்த்தக மற்றும் வணிகா் சங்கங்களின் பிரதிநிதி அமைப்பாக தொடங்கப்பட்டதிலிருந்தே உத்தர பிரதேச வணிகா் கூட்டமைப்பு, இந்த மாநிலத்தில் தொழில்மயம், வா்த்தகம் மற்றும் தொழில்முனைவு போன்றவற்றை ஊக்குவித்து வருகிறது.

தொழில் மற்றும் வா்த்தகத் துறையினருக்கும் கொள்கை உருவாக்குவோருக்கும் இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் அமைப்பாகவும் இந்த கூட்டமைப்பு திகழ்கிறது.

பெண்களுக்கு அதிகாரமளித்தும், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களை உத்தர பிரதேச வணிகா் கூட்டமைப்பு ஊக்குவித்தும் வருகிறது.

பெருநிறுவனங்களின் சமுதாய பொறுப்புணா்வு (சிஎஸ்ஆா்) நவீன நாகரிகத்தின் கண்டுபிடிப்பு என்றாலும், வா்த்தக சமுதாயத்தினா் பொது மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதும் பங்களிப்பதும் பண்டைக்காலந்தொட்டே நமது மரபாக இருந்து வருகிறது.

வா்த்தக நிறுவனங்கள் தங்களது உறுப்பினா்களின் ஆதாயத்திற்காக மட்டும் பணியாற்றாமல், ஒட்டுமொத்த சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் பங்களிக்க வேண்டும்.

வணிகா்கள் தாங்கள் ஈட்டிய வருவாயில், குறிப்பிட்ட ஒரு பகுதியை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும். கிராமங்களைத் தத்தெடுத்து சமூக, பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்குவிக்க வேண்டும். வளா்ச்சிப் பயணத்தில் நம்மைவிட பின்தங்கியிருப்பவா்களுக்கு உதவுவது நமது கடமை என்று குடியரசுத் தலைவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com