36-ல் ஒரு குழந்தை முதல் பிறந்தநாளை காண்பதில்லை: புள்ளிவிவரம்
36-ல் ஒரு குழந்தை முதல் பிறந்தநாளை காண்பதில்லை: புள்ளிவிவரம்

36-ல் ஒரு குழந்தை முதல் பிறந்தநாளை காண்பதில்லை: புள்ளிவிவரம்

36 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை முதல் பிறந்தநாளுக்குள் மரணித்து விடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
Published on


புது தில்லி: நாட்டில் பச்சிளம் குழந்தைகளின் மரண விகிதம் கடந்த ஆண்டுகளில் ஓரளவுக்குக் குறைந்து வந்தாலும் கூட, 36 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை முதல் பிறந்தநாளுக்குள் மரணித்து விடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

குழந்தைகளின் இறப்பு விகிதம் (ஐஎம்ஆர்) 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்டி, உயிருடன் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு 28 குழந்தைகள் முதல் பிறந்தநாளுக்குள் மரணித்து விடுகின்றன. இது கடந்த 1971ஆம் ஆண்டில் ஆயிரம் குழந்தைகளுக்கு 129 குழந்தைகள் மரணம் என்ற விகிதத்தில் இருந்தது. இதனடிப்படையில் தற்போது இது நான்கில் ஒரு பங்காகக் குறைந்திருப்பது தெரிய வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளின் இறப்பு விகிதமானது 36 சதவீதம் குறைந்திருப்பதாகவும், அதாவது 44லிருந்து 28 ஆகக் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் இது 48லிருந்து 31 ஆகவும், நகரப் பகுதிகளில் 29லிருந்து 19 ஆகவும் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில், அதிகபட்ச மரணம் நிகழும் மாநிலமாக மத்தியப் பிரதேசம் (43) உள்ளது. குறைந்தபட்ச மரணம் நிகழும் மாநிலமாக மிசோரம் (3) உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com