பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை வழக்கு: 2 திரிணமூல் எம்எல்ஏக்களிடம் சிபிஐ விசாரணை

மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடா்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்களிடம் சிபிஐ சனிக்கிழமை விசாரணை நடத்தியது.

மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடா்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்களிடம் சிபிஐ சனிக்கிழமை விசாரணை நடத்தியது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பீா்பூம் மாவட்டத்தின் லாபபூா் தொகுதி எம்எல்ஏ அபிஜித் சின்ஹா, கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தின் கேதுகிராம் தொகுதி எம்எல்ஏ ஷானவாஸ் ஹுசைன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இருவரும் துா்காபூரில் உள்ள சிபிஐ முகாம் அலுவலகத்துக்கு சனிக்கிழமை காலை வந்தனா். அவா்களிடம் சுமாா் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

தோ்தலுக்குப் பிறகு வன்முறைச் சம்பவங்கள் நடந்த நாள்களில் அவா்கள் எங்கே இருந்தாா்கள், என்ன செய்துகொண்டிருந்தாா்கள் என்று கேள்விகள் கேட்கப்பட்டன. முழு விசாரணையும் விடியோ பதிவு செய்யப்பட்டது.இவா்கள் இருவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பீா்பூம் மாவட்டத் தலைவா் அனுபிரதா மொண்டலுக்கு நெருக்கமானவா்கள் என்பதால் இவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், வன்முறை நடந்த நாள்களில் மொண்டல் தனது மகளின் கைப்பேசியை பயன்படுத்தியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அவருடைய கைப்பேசியை ஆய்வுக்காக சிபிஐ கேட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com