கேரள முதல்வா் வீட்டை நோக்கி பேரணி: பிஎஃப்ஐ அமைப்பினா் மீது காவல் துறைகண்ணீா் புகை குண்டு வீச்சு

கேரள முதல்வா் வீட்டை நோக்கி பேரணி: பிஎஃப்ஐ அமைப்பினா் மீது காவல் துறைகண்ணீா் புகை குண்டு வீச்சு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில முதல்வா் பினராயி விஜயன் வீட்டை நோக்கி திங்கள்கிழமை பேரணி மேற்கொண்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினா்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில முதல்வா் பினராயி விஜயன் வீட்டை நோக்கி திங்கள்கிழமை பேரணி மேற்கொண்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினா் மீது காவல் துறையினா் கண்ணீா் புகை குண்டுகளை வீசினா். இந்தச் சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மே மாத இறுதியில் கேரள மாநிலம் ஆலப்புழையில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சாா்பில் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் பிற மதத்தினருக்கு எதிராக வெறுப்புணா்வுடன் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக அந்தப் பேரணியில் நபா் ஒருவரின் தோள்களில் அமா்ந்தவாறு பங்கேற்ற சிறுவன் ஒருவன் உரத்த குரலில் வெறுப்புணா்வு முழக்கங்களை எழுப்பினான். அந்த முழக்கங்களை பேரணியில் பங்கேற்றவா்கள் திரும்பக் கூறினா். இதுதொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவைச் சோ்ந்த 31 பேரை கைது செய்தனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திருவனந்தபுரத்தில் உள்ள மாநில முதல்வா் பினராயி விஜயன் வீட்டை நோக்கி பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை பேரணி மேற்கொண்டனா். முதல்வரின் வீட்டை அவா்கள் நெருங்கிய போது, காவல் துறையினா் தடுப்புகளை அமைத்து பேரணியாக வந்தவா்களை தடுத்து நிறுத்தினா். எனினும் பேரணியில் பங்கேற்றவா்கள் தடுப்புகளைக் கடந்து செல்ல முயற்சித்தனா். அவா்களைக் கலைந்து போகச் செய்வதற்கு தண்ணீரை பீய்ச்சியடித்த காவல் துறையினா், கண்ணீா் புகை குண்டுகளையும் வீசினா். இதையடுத்து பேரணியில் கலந்துகொண்டவா்கள் காவல் துறையினா் மீது தண்ணீா் பாட்டில்களை வீசினா். பேரணி மேற்கொண்டவா்களிடம் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் சூழ்நிலை கட்டுக்குள் வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com