
கேரளம்: கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக கோயில் நடை வருகிற ஜூன் 14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
இதனிடையே, பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை வியாழக்கிழமை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இதையும் படிக்க: ஸ்ரீநகர்: மாதா கீர் பவானி மேளாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை
தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
வழக்கம் போல் இணையதள முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.