கர்நாடகத்தில் அதிர்ச்சி: தலித் இளைஞரை காதலித்த பெண் கழுத்து நெரித்துக் கொலை

கர்நாடகத்தில் அதிர்ச்சி: தலித் இளைஞரை காதலித்த பெண் கழுத்து நெரித்துக் கொலை

தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததற்காக தன் மகளைக் கொன்றுவிட்டு, கர்நாடகத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையில் ஒருவர் சரணடைந்துள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். 

தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததற்காக தன் மகளைக் கொன்றுவிட்டு, கர்நாடகத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையில் ஒருவர் சரணடைந்துள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். 

மைசூரு மாவட்டம், பெரியபட்னா தாலுகாவில் உள்ள ககுண்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் திங்கள்கிழமை அதிகாலை தனது 17 வயது மகள் ஷாலினியை கழுத்து நெரித்துக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

கர்நாடகத்தில் உயர் சாதியாகக் கருதப்படும் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த ஷானிலி 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவள் மேலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரை காதலித்து வந்தாள். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

இதையறிந்த பெற்றோர் சிறுமி மைனர் என்பதால் இளைஞர் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். காவல் நிலையத்தில் பெற்றோருக்கு எதிராக மகள் வாக்குமூலம் அளித்துள்ளார். தலித் இளைஞரை தான் காதலிப்பதாகவும், பெற்றோருடன் செல்ல மறுத்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர், அவளை சமாதானம் செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

வீட்டிற்கு வந்த பிறகும், அவனை காதலிப்பதாகவும், அவனை மட்டுமே திருமணம் செய்துகொள்வதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தந்தை தன் மகளின்  கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உடலை தலித் சிறுவனின் கிராமத்தில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் வீசியுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com