ஸ்ரீநகர்: மாதா கீர் பவானி மேளாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை

ஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற ரக்னியா தேவி கோயிலில் மாதா கீர் பவானி மேளாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். 
ஸ்ரீநகர்: மாதா கீர் பவானி மேளாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற ரக்னியா தேவி கோயிலில் மாதா கீர் பவானி மேளாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கோயிலுக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கோயிலுக்கு வர மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மாதா கீர் பவானி மேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு துல்லாமுல்லா கந்தர்பால் அமைப்பு வரவேற்பு அளித்துள்ளது. மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் அமைதியின் அடையாளமாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர், பழச்சாறு மற்றும் ரோஜாக்களை விநியோகித்தது. 

ஸ்ரீநகரில் இருந்து வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதுண்டு. 

கீர் என்ற சொல் பால் மற்றும் அரிசி கொழுக்கட்டையை குறிக்கிறது. இங்குள்ள தெய்வத்தை சாந்தப்படுத்துவதற்காக பால் கொழுக்கட்டை நிவேதனமாக வழங்கப்படுகிறது. கீர் பவானி சில நேரங்களில் 'பால் தெய்வம்' என்றும் அழைப்பதுண்டு. பெரும்பாலான காஷ்மீர் இந்துக்கள் கீர் பவானியை தங்கள் குலதேவியாக வணங்குகிறார்கள். 

மாதா கீர் பவானி கோயிலில் நடைபெறும் மேளாவில், ஜம்மு காஷ்மீர் இளைஞர் மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் ஷெஹ்ரேயர் தார், உதான் மிஷன் அறக்கட்டளையின் தலைவர் ஜீஷன் ஃபரூக் தார் மற்றும் அமைதிக்கான பொதுச் செயலாளர் ஷேக் மின்ஹாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com