
பிகாரில் பூர்னியா மாவட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் பூர்னியா மாவட்டத்தின் தாராபாடி பகுதியில், திருமண விழாவில் பங்கேற்று கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நானியா கிராமத்திக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பூர்னியா-கிஷன்கஞ்ச் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்தது.
காரில் பயணித்த எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேசப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. காயமடைந்த இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும், உள்ளாட்சி நிர்வாகம் விரைவில் சடலங்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் வட்ட அதிகாரி ராஜ்சேகர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.