
பிகாரின் வைஷாலி மாவட்டத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 120 பேருக்கு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் படேபூர் தொகுதியில் உள்ள மகாதி தரம்சந்த் பஞ்சாயத்தின் வார்டு 10ல் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் சத்ய நாராயணன் பூஜையில் கலந்துகொண்டு பிரசாதம் சாப்பிட்ட 120-க்கு மேற்பட்டவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் அமிதாப் குமார் சின்ஹா கூறியதாவது,
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வார்டு எண் 10க்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தோம். உணவு விஷமானதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் மற்றும் தேவையான மருந்துகளை விநியோகித்துள்ளோம்.
பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மோசமான உடல்நிலையில் இருந்ததால், அவர்கள் படேபூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், பச்சை வாழைப்பழங்களைப் பழுக்க வைக்கும் ரசாயனம் அதிகமாக இருந்தது தெரியவந்தது. மேலும், வாழைப்பழங்களை வேகவைத்துள்ளனர். இதை உட்கொண்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.