சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அசாம் மற்றும் மேகாலயாவில் வெள்ளம்: 31 பேர் உயிரிழப்பு

அசாம் மற்றும் மேகாலயாவில் கடந்த 2 நாள்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

News image
Updated On :18 ஜூன் 2022, 11:11 am

DIN

கவுகாத்தி: அசாம் மற்றும் மேகாலயாவில் கடந்த 2 நாள்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாமில் 28 மாவட்டங்களில் சுமார் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.

கடந்த இரண்டு நாள்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் அசாமில் 12 பேரும், மேகாலயாவில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 60 ஆண்டுகளில் அகர்தலாவில் பெய்த மூன்றாவது மிக அதிகமான மழை இது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். வெள்ளம் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

மேகாலயா மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் கான்ராட் சங்மா அறிவித்துள்ளார்.

அசாமில் சுமார் 3,000 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் 43,000 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பல மதகுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள நிலைமை குறித்து கேட்டறிந்ததோடு, மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.