
புது தில்லி: காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புது தில்லியின் பல முக்கிய சாலைகளை காவல்துறையினர் மூடியிருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை முன்பு ராகுல் காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ள நிலையில், அமலாக்கத்துறையின விசாரணையைக் கண்டித்து, காங்கிரஸ் போராட்டத்தை தடுத்து நிறுத்தும், பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்துத் தடை விதித்து போக்குவரத்துக் காவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
இதனால், திங்கள்கிழமை காலை பள்ளி, கல்லூரி, பணியிடங்களுக்கு என விறுவிறுவெனப் புறப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்றுள்ளன.
இதையும் படிக்க.. செல்லிடப்பேசியால் தூக்கம் தொலைகிறதா? ஒரே வழி
இது தொடர்பான புகைப்படங்களைப் பார்க்கும் போது ஏதோ ஹாலிவுட் பட கிராஃபிக்ஸ் காட்சி போல இருக்கிறது. எனினும், கார்கள் மெல்ல நகரக் கூட முடியாமல், கிடைக்கும் சிறிய இடங்களில் கூட புகுந்து சாலை முழுக்க கார்களின் அணிவகுப்பாக உள்ளது.
தில்லி-நொய்டா- தில்லி விமான நிலையம், மீரட் எக்ஸ்பிரஸ்வே, ஆனந்த் விஹார், சாரை காலே கான், பிரகதி மெய்டன் மற்றும் தில்லியின் இதர பகுதிகளிலும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.