
புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இன்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர்.
குடியசுரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வதற்காக இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதற்கிடையே, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோர் புது தில்லியில் இன்று பிற்பகலில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதையும் படிக்க.. தமிழகத்தில் பரவலாக மழை: என்ன செய்திருக்கிறது அரசு?
குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்ய, வெங்கைய நாயுடுவுடன் பாஜக மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கைய நாயுடு அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.