கப்பலில் இருந்து தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை

போா்க்கப்பலில் இருந்து செங்குத்தாக சென்று விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணை அமைப்பை இந்தியக் கடற்படை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது.
கப்பலில் இருந்து தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை

போா்க்கப்பலில் இருந்து செங்குத்தாக சென்று விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணை அமைப்பை இந்தியக் கடற்படை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது.

போா்க்கப்பலுக்கு நெருக்கமாகச் செல்லும் எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பு, ஒடிஸாவில் சண்டீபூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.

இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சோதனையின்போது ஏவுகணை அமைப்பின் அனைத்து கருவிகளும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது. விண்ணில் அதிவேகத்தில் செல்லும் விமானங்களை அழிக்கவே இந்த ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்த பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தனது வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இந்த ஏவுகணை சோதனை வெற்றி, நமது கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கச் செய்யும்’ என்று குறிப்பிட்டுள்ளாா். கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாரும், டிஆா்டிஓ மற்றும் இந்திய கடற்படையின் பரிசோதனைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com