ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது: 4 பேர் பலி
மும்பை: ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது நேரிட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரை ஓட்டிய இருவர் உள்பட 9 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மும்பை கடற்பகுதி அருகே எண்ணெய் எடுக்கும் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுதொடர்பாக ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், 7 பயணிகள், 2 ஓட்டுநர்கள் உள்பட 9 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் அரபிக் கடலில் சாகர் கிரண் என்ற பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதுவரை நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓஎன்ஜிசி மீட்புக் குழுவினருடன் இந்திய கடலோர காவல் படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மும்பையிலிருந்து 7 நாட்டிகல் தொலைவில் அரபிக் கடலில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.