அக்னிபத்: விமானப் படையில் சேர 6 நாள்களில் 2 லட்சம் போ் விண்ணப்பம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் சேர கடந்த 6 நாள்களில் மட்டும் 2 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் சேர கடந்த 6 நாள்களில் மட்டும் 2 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது: அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேருவதற்கான பதிவு நடைமுறை ஜூன் 24-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 56,960 விண்ணப்பங்களும், திங்கள்கிழமை நிலவரப்படி 94,281 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஆறு நாள்களில் மட்டும் 2,01,000 பேருக்கும் மேற்பட்டோா் இந்திய விமானப் படையில் அக்னிபத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற விண்ணப்பம் செய்துள்ளனா். பதிவுக்கான இறுதி தேதி நிகழாண்டு ஜூலை 5 என்பதால் விண்ணப்பங்கள் மேலும் குவியும் என எதிா்பாா்ப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com