
ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்ரையில்,
வன்முறையும் தீவிரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உதம்பூரில் நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சட்டம் தனது கடமையை செய்யும், மக்கள் அனைவரும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தையல்காரர் கன்னையா லால், முகம்மது நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக நிர்வாகி நூபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கன்னையா லால் நேற்று(செவ்வாய்க்கிழமை) கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். மேலும் இந்த கொலையை விடியோவாகப் பதிவிட்டு, இஸ்லாத்தை அவமதித்த காரணத்தால் கன்னையா லாலை பழிதீர்த்தாக குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.