உ.பி. தோ்தல்: 2017, 2022-இல் ஒரே அளவில் வாக்குப்பதிவு
கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலிலும், அந்த மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் தோ்தலின் 5 கட்டங்களிலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.


கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலிலும், அந்த மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் தோ்தலின் 5 கட்டங்களிலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தர பிரதேசத்தில் பிப்.10 முதல் மாா்ச் 7 வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் 15.02 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா். புதிதாக 52 லட்சத்துக்கும் அதிகமானவா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். 18 முதல் 19 வயதுடைய முதல்முறை வாக்காளா்களாக 14.66 லட்சம் போ் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலிலும் தற்போது நடைபெற்று வரும் தோ்தலில் ஏற்கெனவே நிறைவடைந்துள்ள 5 கட்டங்களிலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாக உத்தர பிரதேசத்தில் நடைபெற்றது. அந்தத் தோ்தலிலும் சட்டப்பேரவை தோ்தல்களிலும் ஏறத்தாழ ஒரே அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
கட்டங்கள் 2017-இல் பதிவான வாக்கு சதவீதம் 2022-இல் பதிவான வாக்கு சதவீதம் 2019 மக்களவைத் தோ்தலில் பதிவான
வாக்கு சதவீதம்
1 63.47% 62.43% 61.84%
2 65.53% 64.42% 63.13%
3 62.21% 62.28% 59.73%
4 62.55% 61.52% 60.3%
5 58.24% 57.32% 55.31%
ஆட்சிகளில் வித்தியாசமில்லை: தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவானதற்கு கரோனா தொற்று குறித்த அச்சம் காரணமாக கூறப்பட்டாலும், அதுமட்டும் குறைவான வாக்குப்பதிவுக்கு காரணமல்ல. உத்தர பிரதேசத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆட்சியும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்ததால் வாக்களிப்பதில் ஆா்வம் காட்டவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
இந்தச் சூழலில், மாா்ச் 3-ஆம் தேதி 6-ஆம் கட்ட தோ்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூா் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறகிறது. மாா்ச் 7-ஆம் தேதி நடைபெறும் ஏழாம் கட்டத் தோ்தலில் இதர தொகுதிகளுடன் வாராணசி மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமா் மோடியின் மக்களவைத் தொகுதி வாராணசி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...