பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த அனைத்து குழந்தைகளையும் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த வகையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு, பாதுகாப்பு, உதவிகளை வழங்குவதற்காக இதுவரை, 1,53,827 குழந்தைகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் நாடு முழுக்க கடந்த பிப்ரவரி 15 -ஆம் தேதி வரை 1,42,949 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். 10,386 குழந்தைகள் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.
மாநில வாரியாகவும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒடிஸா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. பெற்றோர்களை இழந்த மொத்த குழந்தைகள் 26,318 ஆகும். இதில் 24,697 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளன. இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் 20,429 குழந்தைகள் (ஒரு பெற்றோர் 19,707); மூன்றாவது இடத்தில் குஜராத்தில் மொத்தம் 14, 934 (ஒரு பெற்றோர் 13,724) குழந்தைகள் உள்ளன. எண்ணிக்கையில் அதிக அளவில் நான்காவது மாநிலமாக தமிழகத்தில் பெற்றோரில் ஒருவரை இழந்த 11, 567 குழந்தைகள் உள்பட மொத்தம் 11,908 குழந்தைகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகள் எண்ணிக்கை 339 -ஆக உள்ளது. இரண்டு பேர் கைவிட்பட்டுள்ளனர்.