
புது தில்லி: கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டு வரும் தங்களது பிள்ளைகளைக் காண கண்ணீருடன் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான பெற்றோர் காத்திருக்கிறார்கள். அதில் சிஆர்பிஎஸ் படையின் டிஐஜி ஆர்.பி. சிங்கும் ஒருவர்.
காரணம், ஆபரேஷன் கங்கா மூலமாக உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டுள்ள இந்திய மாணவர்களில், சிங்கின் மகனும் ஒருவர்.
இது குறித்து ஆர்.பி. சிங் கூறுகையில், போர் நடந்து கொண்டிருக்கும் உக்ரைனில் பல்வேறு துயரங்களைக் கடந்து எனது மகன் இன்று நாடு திரும்புகிறார். இறுதியாக நான் பட்ட கஷ்டங்களைக் கடந்து எனது மகன் இன்று பாதுகாப்பாக நாடு திரும்புகிறார் என்று உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பேசுகிறார்.
உக்ரைனில் போர் தொடங்கிய நிலையில், அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் கொண்டு வரும் பணியை மத்திய அரசு தொடங்கியது. இன்று சுமார் 3,500 பேரும், நாளை 3,900 பேரும் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.