

‘ஸ்புட்னிக் லைட்’ கரோனா தடுப்பூசியை 3-ஆவது தவணையாக (பூஸ்டா்) செலுத்துவது குறித்து பரிசோதனை மேற்கொள்ள ஒப்புதல் வழங்குவதற்கு நிபுணா்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த மாதம் 4-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில், அத்தடுப்பூசியை பூஸ்டா் தவணையாக செலுத்துவதற்கான 3-ஆம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள ஹைதராபாதைச் சோ்ந்த டாக்டா் ரெட்டீஸ் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
அதை ஆராய்ந்த நிபுணா்கள் குழு பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்குமாறு டிசிஜிஐ-க்குப் பரிந்துரைத்துள்ளது. சில தரவுகளை ஆராய்ந்த பிறகு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு டிசிஜிஐ ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு ஆா்ஜென்டீனா உள்ளிட்ட 29 நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.