4 மாநிலங்களில் பாஜக முன்னிலை: பஞ்சாபில் ஆம் ஆத்மி

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் 11.30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
4 மாநிலங்களில் பாஜக முன்னிலை: பஞ்சாபில் ஆம் ஆத்மி

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் 11.30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காலை 11.30 மணி நிலவரப்படி 4 மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகித்து வருகின்றது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ நிலவரம்:

உத்தரப் பிரதேசம் - 403

பாஜக : 241
சமாஜ்வாதி : 109
பகுஜன் சமாஜ் : 5
காங்கிரஸ் : 4

பஞ்சாப் - 117

ஆம் ஆத்மி : 87
காங்கிரஸ் : 14
சிரோமணி அகாலி தளம் : 9
பாஜக : 4

உத்தரகண்ட் - 70

பாஜக : 44
காங்கிரஸ் : 22

மணிப்பூர் - 41

பாஜக : 18
காங்கிரஸ் : 4

கோவா - 40

பாஜக : 18
காங்கிரஸ் : 11

இதில், பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவும் பெற்றுள்ளன. மணிப்பூர் மற்றும் கோவாவில் பாஜக முன்னிலை பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களுக்கான முன்னிலை இன்னும் பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com