பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் தலைவர்கள் கடும் பின்னடைவு

சிரோமணி அகாலி தளக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார். 
சுக்பீர் சிங் பாதல்
சுக்பீர் சிங் பாதல்

சிரோமணி அகாலி தளக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது

இதில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117ல் 91 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது. 

பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் தங்கள் தொகுதிகளில் பின்னடைவில் உள்ளனர். 

அதுபோல சிரோமணி அகாலி தளம் கட்சி 6 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெக்தீப் கம்போஜ் முன்னிலையில் இருந்து வருகிறார். 

சுக்பீர் சிங்கின் தந்தையும் பஞ்சாபில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான பிரகாஷ் சிங் பாதலும், தான் போட்டியிட்ட லம்பி தொகுதியில் பின்னடைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com