தூய்மைப் பணியைக் கைவிட மறுக்கும் முதல்வரை வீழ்த்திய ஆம் ஆத்மி எம்எல்ஏ-வின் தாய்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை வீழ்த்திய ஆம் ஆத்மி எம்எல்ஏ லாப் சிங் உகோக்கின் தாய் அரசுப் பள்ளியில் தொடர்ந்து தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ லாப் சிங் உகோக்
ஆம் ஆத்மி எம்எல்ஏ லாப் சிங் உகோக்


பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை வீழ்த்திய ஆம் ஆத்மி எம்எல்ஏ லாப் சிங் உகோக்கின் தாய் அரசுப் பள்ளியில் தொடர்ந்து தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னியை ஆம் ஆத்மி வேட்பாளர் லாப் சிங் உகோக் 37,550 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவர் மொபைல் சரிசெய்யும் கடையில் பணியாற்றி வந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், அவரது தாய் பால்தேவ் கௌர் அரசுப் பள்ளியில் தொடர்ந்து தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இதுபற்றி கௌர் கூறியதாவது:

"பணம் சம்பாதிக்க நாங்கள் எப்போதுமே கடினமாகத்தான் உழைத்துள்ளோம். எனது மகனின் நிலை என்னவாக இருந்தாலும், நான் பள்ளியில் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்.

மாநிலத்தின் முதல்வருக்கு எதிராகப் போட்டியிட்டபோதும், என் மகன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை எப்போதுமே இருந்தது."

பள்ளியின் தாளாளர் அம்ரித் பால் கௌர் கூறியதாவது:

"அவரது தாய் நீண்ட நாள்களாக இந்தப் பள்ளியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். அவரும் இதே பள்ளியில்தான் படித்தார். சொந்த கிராமத்துக்கும் பள்ளிக்கும் அவர் நிறைய பெருமை சேர்த்துள்ளார். இந்தப் பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக அவரது தாய் கூறினார்."

அவரது தந்தை தர்ஷன் சிங் பேசுகையில், "கிராம மக்கள் அவரைத் தேர்ந்தெடுந்துள்ளனர். மக்கள் நலனுக்காகவே அவர் பணியாற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் முன்பிருந்தது போலவே தொடர்ந்து வாழ்வோம்" என்றார்.

நீண்ட நாள்களாகத் தெரிந்து வரும் உகோக் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதை கிராம மக்களால் இன்னும் நம்பமுடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com