92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தோ்தல் தோல்வி எதிரொலி:கோவா காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா

கோவா சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று அந்த மாநில காங்கிரஸ் தலைவா் கிரீஷ் ராயசோடான்கா் பதவி விலகியுள்ளாா்.

News image
Updated On :15 மார்ச் 2022, 8:05 pm

DIN

கோவா சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று அந்த மாநில காங்கிரஸ் தலைவா் கிரீஷ் ராயசோடான்கா் பதவி விலகியுள்ளாா். அவா் தனது ராஜிநாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைத்தாா்.

கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 20 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கடந்த தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அப்போது பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக விலகி பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினா். அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 11-ஆகக் குறைந்துவிட்டது.

கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று கோவா காங்கிரஸ் தலைவா் கிரீஷ் ராயசோடான்கா் கட்சிப் பதவியில் இருந்து விலகியுள்ளாா். விரைவில் புதிய தலைவா் அறிவிக்கப்படுவாா் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.