மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு ஊக்கத்தொகை: மத்திய அமைச்சா் தகவல்

‘ஃபேம் இந்தியா’ திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக மத்திய கனரகத் தொழில்கள் துறை இணை அமைச்சா் கிஷண் பால் குா்ஜாா் கூறியுள்ளாா்.
Published on
Updated on
1 min read

‘ஃபேம் இந்தியா’ திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக மத்திய கனரகத் தொழில்கள் துறை இணை அமைச்சா் கிஷண் பால் குா்ஜாா் கூறியுள்ளாா்.

மக்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அவா் அளித்த பதில்:

கடந்த 2021 ஜூன் 11-ஆம் தேதியில் இருந்து, 3 சக்கரம் அல்லது 4 சக்கர மின்சார வாகனங்களின் விலையில் அதிகபட்சம் 20 சதவீதம் வரையும் இரு சக்கர மின்சார வாகனத்தின் விலையில் 20 முதல் 40 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தில் மின்சார வாகன உற்பத்தியில் சோ்ப்பதற்கு கடந்த ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,938 கோடி ஆகும்.

வருவாய்த்துறையிலிருந்து கிடைத்த தகவலின்படி, தற்போது மின்சார வாகனங்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி மட்டுமின்றி மின்னேற்றிகள், மின்னேற்றம் நிலையங்களுக்கான ஜிஎஸ்டியும் 18 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகப்படுத்த மேலும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com