ரஷியாவிடமிருந்து சலுகை விலையில்30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்: ஐஓசி வாங்கியது

ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) வாங்கியுள்ளது.

ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) வாங்கியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. இதில் 1.3 சதவீத கச்சா எண்ணெய் ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் இந்தியா மற்றும் பிற பெரிய இறக்குமதியாளா்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இதர சரக்குகளை சலுகை விலையில் ரஷியா வழங்கத் தொடங்கியுள்ளது.

இதையொட்டி, ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் 30 லட்சம் பீப்பாய் யுரால் கச்சா எண்ணெய்யை இந்தியன் ஆயில் நிறுவனம் வாங்கியுள்ளது. ஒரு பீப்பாய்க்கு 20 முதல் 25 அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.1,500 முதல் ரூ. 1,900) சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதத் திட்டத்துக்கு எதிராக ஈரான் மீது அமெரிக்கா விதித்தத் தடைகள் போல், ரஷியாவுடனான கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி வா்த்தகத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை. இது ரஷியாவிடம் இருந்து வாங்கும் எந்தவொரு சரக்குக்கும் பணம் செலுத்துவதற்கான சா்வதேச கட்டண வழிமுறைகள் இருப்பதை எடுத்துரைக்கிறது என்று தெரிவித்தன.

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் நுகா்வோருக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தாா். இந்தச் சூழலில், பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு பயன்படும் கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் இந்தியன் ஆயில் பொதுத் துறை நிறுவனம் வாங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com