ஒரேநாளில் 3 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத் துறை

ஒரேநாளில் 3 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத் துறை

12 முதல் 14 வயதுக்குட்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
Published on

12 முதல் 14 வயதுக்குட்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, 15 -18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, 

12-14 வயதிற்குப்பட்டவர்களுக்கு கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் மார்ச் 16 முதல் தொடங்கியுள்ளது. 

மார்ச் 1, 2021 நிலவரப்படி நாட்டில் 12 மற்றும் 13 வயதுடைய 4.7 கோடி சிறார்கள் உள்ளனர். மேலும், 2.15 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்கள் சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்களுக்கும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 12 முதல் 14 வயதுடைய 3 லட்சம் சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 180.80 கோடியாக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com