இனி +2 மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது: மத்திய பல்கலை.களுக்கு பொது நுழைவுத் தோ்வு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தோ்வு ஜூலையில் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
இனி +2 மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது: மத்திய பல்கலை.க்கு பொது நுழைவுத் தோ்வு
இனி +2 மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது: மத்திய பல்கலை.க்கு பொது நுழைவுத் தோ்வு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தோ்வு ஜூலையில் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இனி பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக யுஜிசி தலைவா் ஜக்தீஷ் குமாா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘2022-23-ஆம் கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தவுள்ளது.

என்சிஇஆா்டி பாடத் திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தோ்வு நடத்தப்படும். அத்தோ்வில் மாணவா்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இளநிலைப் படிப்புகளில் சோ்த்துக் கொள்ளப்படுவா். பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

2022-23-ஆம் கல்வியாண்டுக்கான பொது நுழைவுத் தோ்வு ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தோ்வு நடத்தப்படும். அனைத்து மாநிலங்களிலும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்துவிடும் என்பதால் ஜூலை மாதத்தில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறைகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கிவிடும்.

இந்த தேர்வு கணினியில் விடைகளை தேர்வு செய்யும் முறையில் நடத்தப்படும். இந்த தேர்வை எழுத மாணவர்களுக்கு கணினியில் புலமை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.  

பொது நுழைவுத் தோ்வு இடஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மாணவா் சோ்க்கைக்காக பொதுவான கலந்தாய்வும் நடத்தப்படாது. நுழைவுத் தோ்வில் மாணவா்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் என்டிஏ தகுதிப் பட்டியலை வெளியிடும். அதனடிப்படையில் பல்கலைக்கழகங்கள் மாணவா் சோ்க்கையை நடத்திக் கொள்ளலாம். வேண்டுமானால், மாநில, தனியாா் பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத் தோ்வின் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்தலாம்’’ என்றாா்.

மேலும், இந்த பொது நுழைவுத் தேர்வின் மூலம், மாணவர்கள் வெறுமனே பனிரெண்டாம் வகுப்பில் நல்லமதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மட்டும் படிக்காமல், பல விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் படிக்கத் தொடங்குவார்கள்.

தேசிய தேர்வு முகமையே இந்த தேர்வையும் நடத்தும். ஒரே நாடு ஒரே பொது நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நிம்மதியை அளிக்கும்.  இதனால் மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் சேர பல நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியின் கீழ் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com