பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி
புதுதில்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரையில், “தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்.
நாட்டின் சுதந்திரத்திற்காக புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஆங்கிலேயர்களால் 1931-ல் தூக்கிலிடப்பட்டனர்.
அவர்கள் தூக்கிலிடப்பட்டபோது அவர்கள் மூவரும் 20 வயதின் தொடக்கத்தில் இருந்தனர். பின்னர் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் சின்னங்களாக மாறிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.