புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காங்கிரஸ் அமைப்புத் தேர்தல்: மார்ச் 26-ல் பொதுச் செயலாளர்கள் ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 3:19 am

DIN

காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர்(அமைப்பு) கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்கள் சேர்க்கை, அமைப்பு தேர்தல்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் பொறுப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து ஜி-23 தலைவர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். கட்சியின் தலைவர் உள்ளிட்ட அமைப்புத் தேர்தல்களை உடனடியாக நடத்தவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த வாரம் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வீட்டில் ஜி-23 தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் முடிவில், அனைத்து நிலைகளிலும் உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடிய கூட்டுத் தலைமையே காங்கிரஸை வலுப்படுத்த சரியான வழி என்று கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அதிருப்தி தலைவா்களுடனான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு குலாம் நபி ஆசாத், ஆனந்த் சா்மா, மணீஷ் திவாரி உள்ளிட்டோரை சோனியா காந்தி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.