முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் அதிரடியாகக் குறைப்பு: பஞ்சாப் முதல்வர்

ஒருவர் எத்தனை முறை எம்எல்ஏ-வாக இருந்தாலும், ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான ஓய்வூதியம் மட்டுமே இனி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் அதிரடியாகக் குறைப்பு: பஞ்சாப் முதல்வர்
முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் அதிரடியாகக் குறைப்பு: பஞ்சாப் முதல்வர்


சண்டிகர்: ஒருவர் எத்தனை முறை எம்எல்ஏ-வாக இருந்தாலும், ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான ஓய்வூதியம் மட்டுமே இனி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில முன்னாள் எம்எல்ஏக்கள், இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர்களாக இருந்தாலும் ஐந்து முறை அல்லது 10 முறை எம்எல்ஏவாக இருந்தாலும் இனி, அவர்களுக்கு ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் விடியோ மூலம் பேசிய பகவந்த் மான் கூறினார்.

மேலும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் சிலர், முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியப் பலனை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சேமிக்கப்படும் பணம், மாநில மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

நமது அரசியல் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட, மக்களிடம் கைகூப்பி வாக்கு கேட்கும் போது உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாக்களியுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். ஆனால், வாக்களித்த மக்களே உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும், ஏராளமான எம்எல்ஏக்கள் மூன்று அல்லது நான்கு, ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர்கள், தேர்தலில் தோல்வி அடைந்தாலோ, கட்சியே போட்டியிட அனுமதிக்காவிட்டாலும் கூட, அவர்களுக்கு மாத ஓய்வூதியமாக பல லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிலருக்கு ரூ.3.50 லட்சம், சில முன்னாள் எம்எல்ஏக்ளுக்கு ரூ.4.50 லட்சம், அவ்வளவு ஏன் இன்னும் சிலர் ரூ.5.50 லட்சம் அளவுக்கு ஓய்வூதியம் வாங்குகிறார்கள். இதனால், மாநில அரசுக்கு மிகப்பெரிய பொருளாதார சுமை ஏற்படுகிறது. இவர்களுக்கான குடும்ப ஓய்வூதியமும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அனைத்து முன்னாள் எம்எல்ஏக்களுக்கும் ஒரு முறை எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு அளிக்கப்படும் ரூ.75 ஆயிரம் மட்டுமே மாதந்தோறும் வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com