பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைப்பு

பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைப்பு

நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனங்களான பிவிஆர் நிறுவனமும், ஐநாக்ஸ் நிறுவனமும் ஒன்றாக இணைய முடிவு செய்யப்பட்டுள்ளன. 
Published on

நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனங்களான பிவிஆர் நிறுவனமும், ஐநாக்ஸ் நிறுவனமும் ஒன்றாக இணைய முடிவு செய்யப்பட்டுள்ளன. 

இரு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று (மார்ச் 27) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரு நிறுவனங்களையும் இணைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு நகரங்களில் பிவிஆர் நிறுவனம் திரையரங்குகளை நடத்தி வருகின்றன. இதேபோன்று ஐநாக்ஸ் நிறுவனம் சார்பிலும் பல்வேறு திரையரங்குகள் இயங்கி வருகின்றன. 

பிவிஆர் நிறுவனத்துக்கு 73 நகரங்களில் 871 திரையரங்குகள் செயல்படுகின்றன. இதேபோன்று ஐநாக்ஸ் நிறுவனத்துக்கு 72 நகரங்களில் 675 திரையரங்குகள் செயல்படுகின்றன. 

இந்நிலையில், இந்த இரு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தின் முடிவில் பிவிஆர் - ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனத்துக்கு பிவிஆர் லிமிட்டெட் இயக்குநர் சஞ்சீவ் குமார் இயக்குநர், தலைமை செயல் இயக்குநராகவும், ஐநாக்ஸ் நிறுவனத்தின் சஞ்சீவ் குமார் செயல் இயக்குநராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நிறுவனங்களிடையே பணப்பரிவத்தனையும் கிடையாது. ஆனா; பங்குகள் மட்டுமே இருவரும் பகிர்ந்துகொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநாக்ஸ், பிவிஆர் பெயரில் தற்போது இயங்கி வரும் திரையரங்குகள் அதே பெயரில் இயங்கும் என்றும், புதிய திரையரங்குகள் தொடங்கினால் மட்டுமே ஒருங்கிணைந்த பிவிஆர் - ஐநாக்ஸ் என்று பெயரிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com