தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஏப். 11 வரை நீதிமன்றக் காவல் 

தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஏப்ரல் 11 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஏப். 11 வரை நீதிமன்றக் காவல் 

தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஏப்ரல் 11 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

என்எஸ்இ கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்களை ‘ஓபிஜி செக்யூரிட்டீஸ்’ என்ற பங்குத் தரகு நிறுவனம் பிற பங்கு தரகா்களுக்கு முன்பாகவே தெரிந்து கொண்டு வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பங்குச் சந்தைத் தரகா்களுக்கு என்எஸ்இ வழங்கும் ‘கோ-லொகேஷன்’ என்ற வசதி மூலம் என்எஸ்இ கணினி சேமிப்பகத்துக்குள் முறைகேடாக முன்கூட்டியே தொடா்பு கொண்டு முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

என்எஸ்இ, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்ாகவும், இதன் மூலம் முறைகேடாகப் பெருமளவில் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குத் தொடா்பாக என்எஸ்இ முன்னாள் நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி கைது செய்தனா். 

இவ்வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது ஏப்ரல் 11 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com