'விபத்து அல்ல, முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்'.. சொன்னது?

கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்'
முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்'

கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, தனது எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பிரமோத் சாவந்த், இந்த முறை நடந்தது விபத்து அல்ல, நான் இந்த உயர் பதவிக்கு போட்டியிட்டு தேர்வாகியுள்ளேன். வெறுமனே தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். பனாஜி அருகேயுள்ள சியாமா பிரசாத் முகா்ஜி மைதானத்தில் காலை 11 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சுமாா் 10,000 பாா்வையாளா்கள் பங்கேற்றனர்.

முதல்வா் பிரமோத்துடன் அமைச்சா்களாக எட்டு போ் பதவியேற்றுக் கொண்டனர். இம்மாநில அமைச்சரவையில் முதல்வா் தவிா்த்து, 11 அமைச்சா்கள் வரை இடம்பெற முடியும்.

கோவாவில் முதல்வா் பதவியேற்பு விழா ஆளுநா் மாளிகையில் அல்லாமல் வெளியிடத்தில் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2012 பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, பனாஜியில் உள்ள கேம்பல் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வராக மனோகா் பாரிக்கா் பதவியேற்றாா்.

40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவைக்கு அண்மையில் தோ்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரின் ஆதரவுடன் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

இதனிடையே, புதிய சட்டப் பேரவையின் 2 நாள் கூட்டத்துக்கு ஆளுநா் ஸ்ரீதரன் பிள்ளை அழைப்பு விடுத்துள்ளாா். வரும் 29-ஆம் தேதி தொடங்கும் இக்கூட்டத்தின்போது, பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், புதிய அவைத் தலைவா் தோ்வும் நடைபெறவிருக்கிறது.

மூன்று முறை எம்எல்ஏவான பிரமோத் சாவந்த் (48), ஆயுா்வேத மருத்துவா் ஆவாா். வடக்கு கோவாவில் உள்ள சன்காலிம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அவா், கடந்த 2017-இல் பாரிக்கா் தலைமையில் பாஜக ஆட்சியமைத்தபோது, பேரவைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். கோவா முதல்வராக இருந்த மனோகா் பாரிக்கா், கடந்த 2019, மாா்ச் மாதம் மரணமடைந்ததையடுத்து, முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com