
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தமிழக ராணுவ வீரரின் பையில் கையெறி குண்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
ராணுவத்தின் ராஷ்திரிய ரைபிள் பிரிவில் வேலூரை சேர்ந்த பாலாஜி சம்பத் என்பவர் பணியாற்றி வருகிறார். விடுமுறையை தொடர்ந்து, வீட்டிற்கு வருவதற்காக ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை 9 மணியளவில் வந்துள்ளார்.
ஸ்ரீநகரில் இருந்து தில்லி வழியாக சென்னை வரும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த அவரின் உடமைகளை விமான நிலைய ஊழியர்கள் பரிசோதித்துள்ளனர்.
அப்போது அவரது பையில் கையெறி குண்டு இருப்பதை கண்டுபிடித்த ஊழியர்கள், உடனடியாக பணியிலிருந்த சிஆர்பிஎஃப் காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, புல்வாமா மாவட்ட காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து, கையெறி குண்டு குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.