
அட்சய திருதியை நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'அட்சய திருதியை நாளில் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சிறப்பான நாள் அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்பைக் கொண்டுவர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
அட்சய திருதியை நாளில் செல்வ வளம் வேண்டி மக்கள் கோயிலுக்குச் செல்வதும் இன்றைய நாளில் வீட்டில் வளம் கொழிக்க தங்கம் வாங்குவதும் வழக்கம்.
வட மாநிலங்களில் மக்கள் புனித நதிகளில் நீராடி வழிபாடு மேற்கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.