ஜோத்பூர் கலவரத்தில் இதுவரை 141 பேர் கைது 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 
ஜோத்பூர் கலவரத்தில் இதுவரை 141 பேர் கைது 
Published on
Updated on
1 min read

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

ஜோத்பூரின் ஜலோரி கேட் சந்திப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பால்முகிந்த் பிஸ்லாவின் சிலை அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை நள்ளிரவு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு ஏற்கனவே கட்டப்பட்டிருந்த காவிக் கொடி அகற்றப்பட்டதாக சிலர் ஆட்சேபம் தெரிவித்ததில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் கலவரமாக மாறியது.

இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் எம்எல் லாதர் கூறுகையில், 

கலவரம் நடந்த இடத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், புதிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றார். 

முன்னதாக, புதன்கிழமை நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவை விதித்தும், மொபைல் இணைய சேவைகளை நிறுத்தி வைப்பதற்கும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் கலவரம் தொடர்பாக தற்போது வரை 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 எப்ஐஆர்கள், எட்டு நபர்களால் பதிவு செய்யப்பட்டன. இந்த வன்முறையில் ஒன்பது போலீசார் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com