கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுராவில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

மதுராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தனர். 
Published on

மதுராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா கூறுகையில், 

யமுனா விரைச்சாலையில் அதிகாலை 5 மணியளவில் இந்த சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஹர்டோயில் இருந்து நொய்டாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கார் மற்றொரு அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் பலத்த காயமடைந்தனர். 

இறந்தவர்கள் லல்லு கௌதம்(60), அவரது மனைவி சுட்கி (55), மகன்கள் சுஞ்சய்(30), ராஜேஷ்(25), அவர்களின் மனைவிகள், நிஷா(28), நந்தினி(22), சஞ்சயின் மகன் தீரஜ் (6) என அடையாளம் காணப்பட்டனர். 

மேலும், லல்லு கௌதமின் மூன்றாவது மகள் கோபால் (23), சஞ்சயின் இரண்டாவது மகள் ஹர்ஷ் (3) ஆகியோர் படுகாயமடைந்தனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

விபத்து நடந்த இடத்திலிருந்து சேதமடைந்த வாகனத்தை அகற்ற கிரேன் பயன்படுத்தப்பட்டது, விசாரணை நடந்து வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com