
கேரளத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான பின் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 200 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளம் மாநிலம், காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் நகரில் உள்ள துரித உணவுக்கடை ஒன்றில் பழைய கோழி இறைச்சியால் செய்யப்பட்ட ஷவர்மா சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி பலியான பின்பு அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவின்படி இதுவரை 2,180-க்கும் மேற்பட்ட உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் 340 கிலோவுக்கும் அதிகமான கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
மேலும், கெடமால் இருப்பதற்காக ரசாயனம் தடவப்பட்ட 6,240 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
இந்தச் சோதனைகளில் முறையாக பதிவு செய்யாத, உரிமம் இல்லாத 201 உணவகங்கள் மூடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.