
பொக்ரான் வெடிப்பை மேற்கோள் காட்டி தேசிய தொழில்நுட்ப நாளான இன்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய தொழில்நுட்ப நாள் ஒவ்வொரு வருடமும் மே 11ஆம் நாள், நமது பொறியாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் தொழில்நுட்ப சாதனைகளை கவனப்படுத்தக் கொண்டப்படுகிறது.
இந்த தினத்தை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.
இந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியதாவது:
1998இல் நடத்திய பொக்ரான் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய நமது அறிவியலாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாஜ்பாய் அவர்களின் தைரியமான அரசியல் ஆளுமையை பெருமையுடன் நினைவுக் கூர்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.