இராக்கில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலியாகினர்.
இராக்கில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலியாகினர்.

ஜம்மு-காஷ்மீரில் அரசு அதிகாரி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

புத்காம் மாவட்டத்தில் சதூரா கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் இரண்டு பயங்கரவாதிகள் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கு பணிபுரியும் அரசு அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்றதாக காவல்துறை தெரிவித்தனர். 

தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த் துறை அதிகாரியாக பணிபுரிபவர் ராகுல் பட். இவர் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

பலத்த காயமடைந்த அவர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

புத்காம் பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து, தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com