பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வருகிற 16 ஆம் தேதி நேபாளம் செல்கிறார்.
மே 16 ஆம் தேதி புத்த பூர்ணிமா நிகழ்வை முன்னிட்டு பிரதமர் மோடி, நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினிக்குச் செல்லவிருக்கிறார்.
நேபாள பிரதரின் அழைப்பை ஏற்று வருகிற 16 ஆம் தேதி பிரதமர் மோடி இந்த பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
லும்பினியில் உள்ள மாயாதேவி கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர், புத்த பூர்ணிமாவையொட்டி அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். மேலும் இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளனர்.
கடந்த 2014 முதல் ஐந்தாவது முறையாக பிரதமர் மோடி, நேபாளம் செல்வது குறிப்பிடத்தக்கது.
நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா, கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.