
கொழும்பு: இலங்கைக்கு பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதாக இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க இலங்கை மக்களுக்கு உறுதியளித்துள்ளார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான எதிர்காலம் கொண்ட ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் மீண்டும் மூன்று வேளை உணவுக்காக வரிசைகளில் நிற்பதிலிருந்து விடுபடவும் முடியும் என்று ரணில் கூறினார்.
இலங்கைப் பிரதமரின் கருத்துப்படி, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே அவரது முதன்மையாதாக இருக்கும் என்று கொழும்பு பக்கம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச உதவியுடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை கட்டுப்படுத்துவதாகவும், இதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரது ஆதரவையும் பெறுவதாக விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார் என்று கொழும்பு பக்கம் தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையையடுத்து பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.