
புது தில்லி: தில்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜிநாமா செய்துள்ளார்.
அனில் பைஜால் 1969 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். டிசம்பர் 31, 2016 முதல் தில்லியின் துணைநிலை ஆளுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தில்லியின் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவியது.
இவர் வாஜ்பேயின் அரசமைப்பில் மத்திய உள்துறை செயலாளராக பணியாற்றியுள்ளார்.
இவர், தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் ராஜிநாமா கடிதத்தை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.