
கர்தார்புர்: 1947 பிரிவினையின் போது பிரிந்த குடும்ப உறுப்பினரை 75 வருடங்களுக்குப் பிறகு சமூக வலைதளத்தின் மூலமாக சந்தித்துள்ளார் ஒரு பெண்.
1947 பிரிவினையின் தற்போது பாகிஸ்தானிலுள்ள கர்தார்புரில் மும்தாஜ் பிபி கைக்குழந்தையாக தனது தாயின் பிணத்தின் அருகில் இருந்துள்ளார். முகமது இக்பல் மற்றும் அவரது மனைவி அல்லாஹ் ராஹி கைக்குழந்தையாக இருந்த மும்தாஜை எடுத்து வளர்த்து இருக்கின்றனர். அவர்கள் இட்ட பெயர்தான் மும்தாஜ் பிபி. அவர்கள் பிரிவினையின் போது பஞ்சாபுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இக்பால் மற்றும் அவரது மனைவி மும்தாஜிடம் வளர்ப்பு பெண் என சொல்லவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இக்பால் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மும்தாஜ் வளர்ப்பு மகள் எனவும் சீக்கியர் குடும்பதைச் சார்ந்தவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மும்தாஜின் வளர்ப்புத் தாய்க்கு அவரது சொந்த கிராமம் மற்றும் மும்தாஜின் அப்பா பெயர் தெரிந்திருந்திருக்கிறது. இக்பால் மறைவுக்குப் பிறகு மும்தாஜ் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்துத் தேட ஆரம்பித்து உள்ளனர்.
இருவர் குடும்பமும் சமூக வலைதளத்தில் சந்தித்துக் கொண்டன.
மும்தாஜின் சகோதரர் சர்தார் குர்மீத் சிங், சர்தார் நரேந்திர சிங் உடன் கர்தார்புரிலுள்ள குருத்துவாரா தர்பாரில் சந்தித்துக் கொண்டனர்.
இவ்வாறாக, மும்தாஜ் தொலைந்துப் போன தனது சீக்கிய குடும்பத்தை 75 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.