கர்நாடக மாநிலத்தில், இரண்டாவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருவதால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக துணை ஆணைவர் கே.வி ராஜேந்திரா தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தில் புதன்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இன்று அனைத்து அரசு, உதவிபெறும், உதவிபெறாத தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றால் தற்போதைய நிலை தொடரலாம், என்றார்.
இதற்கிடையில், இரட்டை கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுக்குமாறு உடுப்பி துணை ஆணையர் எம்.குர்மா ராவ் அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.