
சமாஜவாதி தலைவர் ஆசாம் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, இரண்டு வாரங்களில் முறையாக ஜாமீன் கோர வேண்டும் என ஆசாம் கானை அறிவுறுத்தியுள்ளது. மேலும், விசாரணை நீதிமன்றம் தகுதியின் அடிப்படையில் ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
நிலஅபகரிப்பு, மோசடி உள்பட ஏராளமான வழக்குகளில் தொடர்புடைய ஆசாம் கான் தற்போது சீதாபூர் சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனுவை உத்தரப் பிரதேச அரசு முன்பு நிராகரித்தது. நில அபகரிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியை அச்சுறுத்தியதாக உத்தரப் பிரதேச அரசு சார்பில் வாதாடிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ தெரிவித்தார்.
இதையும் படிக்க | யாசின் மாலிக் குற்றவாளி: என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம் மே 17-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், அரசியலமைப்பின் 142 சட்டப்பிரிவின்படி சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆசாத் கானுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
இதே நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை நேற்று (புதன்கிழமை) விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.