பாட்டியாலா சிறை எண் 10-இல் சித்து அடைப்பு: இரவு உணவு உட்கொள்ளவில்லை

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து (58), பாட்டியாலா மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.
பாட்டியாலா சிறை எண் 10-இல் சித்து அடைப்பு
பாட்டியாலா சிறை எண் 10-இல் சித்து அடைப்பு
Published on
Updated on
1 min read

முதியவரை தாக்கிய வழக்கில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து (58), பாட்டியாலா மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

‘மத்திய சிறையில் அறை எண்.10-இல் மற்ற 4 கைதிகளுடன் ஒருவராக அடைக்கப்பட்டுள்ள சித்து, இரவு உணவை உட்கொள்ளவில்லை. அவருக்கான கைதி எண் 137683 என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

34 ஆண்டுகளுக்கு முன்பு 65 வயது முதியவரை தாக்கி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்த வழக்கில், அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி தன் நண்பா்களுடன் காரில் சென்ற நவ்ஜோத் சிங் சித்து, சாலையின் நடுவே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளாா். அப்போது, பின்னால் காரில் வந்த குா்நாம் சிங் (65) என்பவா், தனது வாகனத்துக்கு வழிவிடுமாறு சித்துவிடம் கூறியுள்ளாா். இதில் இரு தரப்பிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சித்து தாக்கியதில் குா்நாம் சிங் காயமடைந்துள்ளாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.

இந்த வழக்கில், முறையீடு, மேல்முறையீடு, மறு ஆய்வுகள் கடந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு, சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பைத் தொடா்ந்து, பாட்டியாலா மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த நவ்ஜோத் சிங் சித்து, பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். கடுங்காவல் தண்டனை என்பதால், சிறையில் சித்துவுக்கு பணி கொடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த மத்திய சிறையில், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவா் பிக்ரம் சிங் மஜிதியா போதைப் பொருள் வழக்கில் அடைக்கப்பட்டுள்ளாா். பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் அமிருதசரஸ் கிழக்கு தொகுதியில் சித்துவுக்கு எதிராக இவா் போட்டியிட்டாா். இவா்கள் இருவரும், அந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் ஜீவன் ஜியோத் கெளரிடம் தோல்வியைத் தழுவியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com